தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் மணல் கடத்துவதாகப் புகார் - trichy sand theft issue

திருச்சியில் நவல்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மணல் கடத்துவதாக ஊராட்சி வார்டு உறுப்பினர், பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருச்சியில் நவல்பட்டு ஊராட்சி
நவல்பட்டு ஊராட்சி

By

Published : Jan 7, 2022, 5:06 PM IST

திருச்சி: திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது நவல்பட்டு ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஜேம்ஸ் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் நவல்பட்டு ஊராட்சியில், அய்யனார் கோயில் பகுதி, ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் இருந்த சரலை, செம்மண்ணை பல நாள்களாக ஜேசிபி மூலம் கடத்துவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

இது நவல்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் இயந்திரத்தின் மூலமாகக் கடத்தப்படுகிறது என்றும், அந்த மண்ணை அண்ணாநகர் ஆறாவது வார்டு குடித்தெரு குறுக்குச் சாலை போடுவதற்குப் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.

நவல்பட்டு ஊராட்சி

மேலும், பஞ்சாயத்து வேலைக்கும் இந்த மண்ணைப் பயன்படுத்துவதால், இதனை நிறுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவல்பட்டு 15ஆவது வார்டு உறுப்பினர் மின்னல் கொடி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நவல்பட்டு ஊராட்சி

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி மூலமாக மட்டுமே நடத்தப்படும்!

ABOUT THE AUTHOR

...view details