திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்கு தினமும் அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 9 மணிக்கு சாத்தப்படுவது வழக்கம். வரும் 28ஆம் தேதி மாலை 3 மணியளவில் கொள்ளிடம் வட காவிரியில் சமயபுரம் மாரியம்மன் தீர்த்தவாரி கண்டருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோயில் 28ஆம் தேதி நடை மூடல் - சமயபுரம் மாரியம்மன் கோயில்
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் 28ஆம் தேதி நடை சாத்தப்படுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோயில்
அதனால் அன்று மாலை 3.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு மறுநாள் 29ஆம் தேதி காலை 5.30 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்படும் எனவும் மூலஸ்தான அம்பாள் சேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறநிலையத் துறை சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:விமானத்தில் தங்கம் கடத்தல் - திருச்சியில் 4 பேர் கைது!