தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து பிரபல ரவுடி உயிரிழப்பு - 22 பேர் காயம் - rowdy died in blast

திருச்சியில் துணிக்கடை வெளியே திடீரென ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் பிரபல ரவுடி உயிரிழந்தார். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து பிரபல ரவுடி உயிரிழப்பு - 22 பேர் காயம்
திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து பிரபல ரவுடி உயிரிழப்பு - 22 பேர் காயம்

By

Published : Oct 3, 2022, 6:57 PM IST

திருச்சி:மெயின் கார்ட் கேட் அருகே சென்னை சில்க்ஸ் துணிக்கடை முன்பு இருசக்கர வாகனத்தில் ஹீலியம் கேஸ் சிலிண்டரினை வைத்து, உத்தரப்பிரதேசத்தைச்சேர்ந்த அனார் சிங் என்பவர் பலூன் வியாபாரம் செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிலிண்டர் அருகே நின்ற கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் கரட்டான் காடு பகுதியைச்சேர்ந்த ரவுடியான ரவிக்குமார் (35) என்ற மாட்டு ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் ஆட்டோவை அருகே நிறுத்திவிட்டு வாடகை வாங்கச்சென்ற ஆட்டோ ஓட்டுநர் வரகனேரி பகுதியைச் சேர்ந்த மன்சூர் என்பவரின் ஆட்டோ முற்றிலுமாக சேதம் அடைந்தது. இந்த விபத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 13 வயது பள்ளி மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சிங்காரத்தோப்பு தனியார் மருத்துவமனையில் ஏழு பெண்கள், மூன்று குழந்தைகள், ஐந்து ஆண்கள் உட்பட 15 நபர்களும், பாபு ரோடு தனியார் மருத்துவமனையில் பிரபாகரன் (36), மகேஷ் (21), சிவாஜி (28) உள்ளிட்ட மூவரும், அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சில்வியா(23), பிரியா(22), கவியரசு(26), ஆகியோரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து திருச்சி கோட்டை காவல் நிலைய காவல்துறை வழக்குப்பதிவு செய்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அனார் சிங்(31) என்ற வட மாநில பலூன் வியாபாரியைத் தேடி வருகின்றனர்.

திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தின் சிசிடிவி காட்சி

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், விபத்து ஏற்பட்ட இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்து,பின்னர் விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து விபத்து குறித்து கேட்டறிந்தார்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தேவரியம்பாக்கம் கேஸ் குடோன் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details