தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கியவர்களைக் கைது செய்யக்கோரி சாலை மறியல்! - Manapuram police are investigating

திருச்சி: மணப்பாறை அருகே கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கல்வீசித் தாக்கியவர்களைக் கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட மணப்பாறை மக்கள்

By

Published : Sep 23, 2019, 9:53 AM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வடக்கிப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக இருப்பவர் அழகர். இவர் நேற்று அருகில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலை விலக்கிவிட்ட இவர், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பியுள்ளார்.

மணப்பாறை அருகே பொதுமக்கள் சாலைமறியல்

இதில் ஒரு தரப்பினர் இன்று காலை வடக்கிப்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் மேற்கூரை உடைந்துள்ளது. பின்னர் வீட்டில் இருந்த அழகரையும் தாக்க முயற்சி செய்ததாக கூறி வடக்கிப்பட்டி கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

இதையும் படியுங்க:

கேஸ் அலுவலகத்தில் கொள்ளை - சிசிடிவி காட்சியால் சிக்கிய திருடன்

ABOUT THE AUTHOR

...view details