தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மணப்பாறை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிக்கை.. ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் சாலை மறியல் - ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே வ.கைகாட்டியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆதிதிராவிட காலனி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 1, 2022, 7:04 PM IST

Updated : Sep 1, 2022, 7:36 PM IST

திருச்சிமணப்பாறை அருகே வ.கைகாட்டி ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ளவர்கள் தங்கள் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து சாலைமறியிலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறை அடுத்த வ.கைகாட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பில் சுமார் 20-க்கும் மேலான குடும்பங்கள் வசிக்கும் நிலையில், பிரதான சாலைக்குச் செல்லும் பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் எந்தவித சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கும் வாகனங்கள் சென்றுவர இயலாத நிலையுள்ளதாகவும்; இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என அப்பகுதியினர் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இதனால், மிகுந்த மன வேதனைக்குள்ளான அப்பகுதி பொதுமக்கள் இன்று (செப்.1) கைகாட்டி–வளநாடு சாலையின் குறுக்கே மர பெஞ்ச், பிளக்ஸ் பேனர் உள்ளிட்டவைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த வளநாடு காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுதாக வருவாய்த்துறையினர் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்புகளை அகற்றுக - ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் சாலை மறியல்

இதையும் படிங்க: Video:நடுரோட்டில் கொலைவெறியுடன் சண்டையிட்டுக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!

Last Updated : Sep 1, 2022, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details