இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், தமிழ்நாட்டில் இந்திப் படிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகள் முன்பு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி திட்டமிட்டிருந்ததை அறிந்த ஸ்டாலின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மாற்றி அமைத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.