திருச்சி:நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வேண்டாம் என ஒதுங்கிய பிறகு, அரசியல் ஆதாயத்திற்காக அவரைப் பயன்படுத்த நினைத்த அவரது ரசிகர்கள் நிலை அந்தோ பரிதாபம்தான் என்று சொல்ல வேண்டும்.
நீங்க எங்க வேணா போங்கங்கற தொனியில் அவரது ரசிகர்களுக்குச் சொல்ல திக்குக்கு ஒருவராகச் சிட்டாய் பறந்துவிட்டனர், இரு பெரும் தலைகளான ஃசபையர் முத்து திமுகவிலும், மற்றொருவரான எஸ்.வி.ஆர். ரவிசங்கர் அதிமுக தரப்பிலும் சரி என்னதான் செய்கிறார்கள்.
ரசிகர்களின் பரிதாபக் கதைகள்
'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல திருச்சியை வலம்வந்து அவர்கள் ரசிகர்களிடம் பேசினோம், கொட்டித்தீர்த்து விட்டார்கள்... "எங்க மன்றத்துல நிறைய பேர் தாத்தாவே ஆகிட்டாங்க, கடைசி காலத்துல எங்களை இப்படி கழற்றிவிட்டுட்டாரு. சரி அது பரவாயில்ல நீங்க எங்க போகணுமோ அங்க போங்கனு சொன்னதால அவரவர்கள் அவரவர்களுக்குப் பிடித்த கட்சியில ஐக்கியம் ஆனோம்.
ஆனா பாருங்க தேர்தல் சமயத்துல அவரோட படத்தைப் பயன்படுத்தக் கூடாது, பெயரைப் பயன்படுத்தக் கூடாதுனு அறிவிக்கிறாரு இது என்னங்க நியாயம், ஒவ்வொரு தேர்தலின்பொழுதும் எனது ஆருயிர் நண்பர் அடைக்கலராஜ் வெற்றிபெற வாழ்த்துகிறேன்னு பொக்கேவோட இவரு கைப்பட எழுதிய போஸ்டரை நாங்க எத்தனைமுறை ஒட்டியிருப்போம். இப்போ மட்டும் நாங்க இவரோட படத்தைப் போட்டா இவருக்கு கசக்குதா" என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் மன்றத்து உறுப்பினர் ஒருவர்.
பால் ஜெயராமனின் பரிதாபக்கதையைக் கேட்டால் 'உச்'கொட்ட ஆரம்பித்துவிடுவீர்கள், 7ஆவது வார்டு இவருக்குதான்னு சொல்ல அதிமுகவில் ஐக்கியமானாரு. மாநகராட்சித் தேர்தலும் வந்தது களத்துல இறங்குடானு அதிமுக சார்பாக விருப்பமனு அளிச்சார்.