தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பட்ஜெட் 2019: ரயில்வேதுறையை லாபகரமாக மாற்ற என்ன செய்யலாம்..? - பட்ஜெட் 2019

திருச்சி: நிதிநிலை அறிக்கையில் ரயில்வேதுறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு செயலாளர் புஷ்பவனம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

Railway budget

By

Published : Jun 30, 2019, 10:02 PM IST

Updated : Jul 1, 2019, 9:13 AM IST

ரயில்வேயை லாபகரமாக மாற்ற:

  • ராணுவத்தினரையும், ஆயுத பொருட்களையும் ஏற்றிச் சென்றால் பாதுகாப்பு துறையிடம் அதற்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
  • மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை சேம நல துறையிடமிருந்து வசூலிக்கவேண்டும்.
  • மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகை கட்டணத்தை மனிதவள மேம்பாட்டு துறையிடம் வசூலிக்க வேண்டும்.
  • ரயிலில் ஒரு இருக்கை கூட பணம் பெறாமல் இயக்ககூடாது என்ற நிலையை உருவாக்கினால் ரயில்வே நிதி ஆதாரம் பெருகும். தேவையை காட்டிலும் அதிகளவில் இருக்கும் ரயில்வேயின் பள்ளிகள், மருத்துவமனைகளை மூடி அந்த நிலங்களை விற்பதன் மூலம் பெருந்தொகை ரயில்வேக்கு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

தேவையற்ற சலுகைகளுக்கு கட்:

தொடர்ந்து பேசிய அவர், ஜூனியர் அலுவலர்கள் முதல் ரயில்வே வாரிய தலைவர் வரை பயன்படுத்த கூடிய சொகுசு ரயில் பெட்டியான சலூன் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 300 சலூன் ரயில் பெட்டிகள் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இவற்றை உடைத்தால் 12 புதிய ரயில்களை அமைக்க முடியும். அலுவலர்கள் விமானத்தில் பயணம் செய்து, சொகுசு ஹோட்டலில் தங்கிக் கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை ரயில்வேத்துறை செலுத்தலாம். சலூன் பெட்டிகளை ஒருமுறை இயக்குவதால் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதுபோன்ற தேவையற்ற விரய நடவடிக்கையை மாற்றி அமைக்க வேண்டும்.

பாதுகாப்புக் குழு செயலாளர் புஷ்பவனம்

அதேபோல் எந்தத் துறையிலும் இல்லாத வகையில் இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அலுவலர்கள் பணிக்காக செல்லும் போதும், ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கும் இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. இவற்றை ரத்து செய்துவிட்டு அனைவரும் டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கான கட்டணத்தை ரயில்வேத்துறை திரும்ப செலுத்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று கூறினார்.

Last Updated : Jul 1, 2019, 9:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details