தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொங்கல் தொகுப்பு வழங்கவந்த அமைச்சர்: கட்சி நிர்வாகிகளால் பொதுமக்கள் சிரமம் - திருச்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கிய அமைச்சர்

பொங்கல் சிறப்புத் தொகுப்பினை வழங்கவந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சுற்றி கட்சி நிர்வாகிகள் சூழ்ந்துகொண்டதால் பொதுமக்கள் பொருள்களை வாங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

By

Published : Jan 4, 2022, 9:41 PM IST

திருச்சி: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடும்விதத்தில், தமிழ்நாடு முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு இன்று (ஜனவரி 4) தொடங்கியது.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பு வளாகத்திலுள்ள அமராவதி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் அரிசி பெறும் 647 குடும்ப அட்டைதாரர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி தொடங்கிவைத்தார். அப்போது அமைச்சரை கட்சி நிர்வாகிகள் சூழ்ந்துகொண்டதால் பொதுமக்கள் பொங்கல் சிறப்புத் தொகுப்பினைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவித்தனர்.

ஒமைக்ரான் மீண்டும் அதிகரித்து வரக்கூடிய நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆர்.என். ரவி, ஸ்டாலினைச் சந்தித்த கடற்படை உயர் அலுவலர்கள் - காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details