திருச்சி:முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று (ஜனவரி 10) தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக முன்களப் பணியாளர்களான திருச்சி மாநகர காவல் துறையினருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஜனவரி 11) தொடங்கியது.
அதனை மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "இன்று திருச்சி மாநகர காவலர்களுக்கு காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.