தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்குத் தடை! - Trichy DIG Ani Vijaya

தூத்துக்குடி, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், திண்டுக்கல் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பணியில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

prohibition-of-friends-of-police-in-6-districts
prohibition-of-friends-of-police-in-6-districts

By

Published : Jul 5, 2020, 9:09 AM IST

Updated : Jul 5, 2020, 10:17 AM IST

சாத்தான்குளம் விவகாரம் பூதகரமாக வெடித்துள்ளது. இச்சம்பவத்தால் மக்களிடையே காவல் துறையினர் மீதான அவநம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளைக் காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டுவந்தது.

ஆரம்பத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு காவல் நிலையப் பணிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினாலும், தற்போது தூத்துக்குடி உள்பட எட்டு மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பணியில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிகமாக பணியில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது என திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா தெரிவித்துள்ளார்.

அதேபோல விழுப்புரம், திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பணியில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடியில் அவர்கள் பணியில் ஈடுபட தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Last Updated : Jul 5, 2020, 10:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details