தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பரிசு போட்டிகள்- திருச்சி மாவட்ட ஆட்சியர் - வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பரிசு போட்டிகள்

திருச்சியில் வாக்காளர்களுக்கு வாக்கு அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பரிசுப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பரிசு போட்டிகள்- திருச்சி மாவட்ட ஆட்சியர்!
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பரிசு போட்டிகள்- திருச்சி மாவட்ட ஆட்சியர்!

By

Published : Feb 15, 2022, 11:51 AM IST

திருச்சி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருச்சி பொது மக்களுக்கு வாக்கு அளிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பரிசு போட்டிகள் நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் போட்டியின் அட்டையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிவராசு வெளியிட்டார். அந்த அட்டையில் “ எனது வாக்கு எனது எதிர்காலம்” போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும் வாக்கு அளிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பர படங்கள் எடுப்பதற்கான போட்டிகள் நடத்த உள்ளனர். “ எனது வாக்கு எனது எதிர்காலம்” என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. தேர்தல் ஆணையத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்த வினாடி வினா போட்டி, பாட்டுப் போட்டி, விளம்பர போட்டி , வீடியோ போட்டி ஆகியவை உட்பட 5 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.

போட்டிகளுக்கான பரிசுத் தொகை


சிறந்த வீடியோ விளம்பரத்திற்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம் தொழில் சாராதவர்களுக்கும், முப்பது லட்சம் தொழில்துறையினருக்கும், பாட்டுப் போட்டியில் முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாய் முதல் ரூ.50,000, ரூ.20,000 விளம்பர வடிவமைப்பு, ரூ.50,000, ரூ.30,000 நிறுவனம் சார்ந்த அமைப்புக்கு எனப் பரிசுத் தொகைகள் வழங்கப்பட உள்ளன.

இதையும் படிங்க:Urban Local Body Election: 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை!

ABOUT THE AUTHOR

...view details