தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சரும் திருச்சி கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளருமான வெல்லமண்டி நடராஜனைக் காணவில்லை என்று இரட்டை இலை சின்னத்துடன்கூடிய சுவரொட்டிகள் அந்தத் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
'வெல்லமண்டி நடராஜனைக் காணவில்லை' - சுவரொட்டியால் பரபரப்பு - Posters pasted in Trichy East constituency
அமைச்சர் வெல்லமண்டி நடராஜனைக் காணவில்லை என திருச்சி கிழக்குத் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுவரொட்டியில், 2016ஆம் ஆண்டு மே முதல் திருச்சி கிழக்குச் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் அமைச்சரான வெல்லமண்டி நடராஜனை எங்குத் தேடியும் கிடைக்கவில்லை என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அதில் இப்படிக்கு திருச்சி கிழக்குத் தொகுதி மக்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தத் தேர்தலில் அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அதுவும் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனைக் காணவில்லை என்று சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TAGGED:
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்