தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சி: திமுக மாணவரணி கண்டனம்! - pollachi issue

திருச்சி: பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் குற்றவாளிகளை தமிழக அரசு பாதுகாக்கிறது என்று திமுக மாணவரணி குற்றம்சாட்டியுள்ளது.

dmk

By

Published : Mar 15, 2019, 7:11 PM IST

திருச்சியில் திமுக மாணவரணி சார்பில் மாநில மாவட்ட மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. இதற்கு மாநில மாணவரணி செயலாளரும், எம்எல்ஏவுமான தமிழரசன் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசின் அனைத்து தேர்வுகளும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்திட வேண்டும் என்றும், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை தொடர் பொதுத் தேர்வுகள் முறையை அறவே நீக்கிவிட்டு முன்பிருந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என்ற பல கோரிக்கைக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகளை பாதுகாக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்வது கண்டத்துக்குரியது என்று கூறினர்.


ABOUT THE AUTHOR

...view details