தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர் மீது போக்சோவின் கீழ் வழக்கு - sexual harassment against children

திருச்சி மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

sexual harassment against children
சிறுமியை பாலியல் வன்கொடுமை

By

Published : Jan 24, 2022, 5:42 PM IST

திருச்சி:14 வயது சிறுமி ஒருவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதாக சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இது குறித்து சமூக நல ஆர்வலர்கள் காவல் துறையினரிடம் புகாரளித்தனர்.

இதையடுத்து சிறுமியின் இருப்பிடத்திற்குச் சென்ற காவலர்கள், சமூக நல அலுவலர்கள் சிறுமியின் தாய் மற்றும் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் சிறுமியை, 16 வயது சிறுவன் உள்பட மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதன் பின்னர், 16 வயது சிறுவன் மற்றும் சம்பந்தப்பட்ட இன்னொரு நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இன்னொரு நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் அவசியம்!

ABOUT THE AUTHOR

...view details