திருச்சி:வளநாடு அடுத்த கழனிவாய்பட்டி அருகேயுள்ள குளத்து பகுதியின் நீர் வரத்து வாரியில் இரவு நேரங்களில் சிலர் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக திருச்சி காவல் கண்காணிப்பாளருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து நேற்றிரவு (ஜன.01) அப்பகுதியில் தனிப்படை காவல் துணையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள குளத்துப் பகுதிக்கு முன்கூட்டியே தனிப்படையினர் வருவதை கண்ட அவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து மணல் திருட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட ஜேசிபி, டிப்பர், டிராக்டர், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் மேலும், இது போன்று அப்பகுதியில் இரவு நேரங்களில் தொடர் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை உள்ளூர் காவல் துறையினர் கண்டும், காணாதது போல் இருப்பதாக அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:சென்னைக்கு கூரியர் பார்சலில் கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்