வன்னியர் சமூகத்திற்கு 20% இட ஒதுக்கீடு கோரி பாமக சார்பில், திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வேண்டும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்க இந்த இட ஒதுக்கீடு அவசியம் என்று கூறி மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 25க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பாமக மாவட்ட செயலாளர் திலிப்குமார், ” தமிழ்நாட்டின் பெரும்பான்மையினரான வன்னியர்கள், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் போதிய வாய்ப்பின்றி உரிய இடங்களைப் பெற முடியாத நிலை நிலவுகிறது. அதனால் வன்னியர்களுக்கு வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் 20% தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று ராமதாஸ் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார். எனினும் இந்த கோரிக்கை நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படவில்லை.