திருச்சி:ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் கூத்தைப்பார் தன்ராஜ், துணைத் தலைவர் திருச்சி ஜி.ஆர். சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி மனு அளித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.ஆர். சிவா, 'பாரம்பரிய முறையில் வேஷ்டி, சாப்பாடு, வாடகைப்படி போன்றவை மட்டும் வழங்கி, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். இதனால் வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி ஏழை, எளிய அனைத்துத் தரப்பு மக்களின் ஜல்லிக்கட்டுக் காளைகளும், இந்த முறை போட்டியில் கலந்துகொள்ள முடியும்.
எளிய முறையில் ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் முறை தேவையில்லை. எளிய முறையில் நடத்த வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில், நடைபெறும் இந்தப் போட்டியில் 700 பேர் கலந்துகொண்டு, ஒரு பிரிவுக்கு 200 வீரர்கள் வீதம் பங்குபெற்று காளைகளை அடக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். ஆகையால், எங்களுக்கு உரிய அனுமதி வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர் பரிசீலனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்' எனத் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு நடக்க வாய்ப்புள்ளது