தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. திருச்சி காந்தி மார்க்கெட் பழைய பால்பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இதன் தொடக்க விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
விழாவில் விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் கைத் தெளிப்பான் கருவி வழங்கப்பட்டது. இதை பெறுவதற்காக திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகள் அங்கு வந்திருந்தனர். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஒரு சில விவசாயிகளுக்கு மட்டும் மருந்து தெளிக்கும் கருவியை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அவரைத் தொடர்ந்து ஆட்சியர் மற்றும் பிற அலுவலர்களும் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரம்பலூர் விவசாயிகள் தங்களுக்கு கருவி வழங்கப்படவில்லை என்று அங்கிருந்த அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.