திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் உயர் நீர்தேக்க தொட்டி மூலம் பாரதியார் நகர், எம்ஜிஆர் நகர், சாய் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த உயர் நீர்தேக்கத் தொட்டிக்கு கடந்த சில நாள்களாக முறையாக காவிரி நீர் ஏற்றாத நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று (மார்ச் 17) காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.