தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மஞ்சம்பட்டி காய்கறி சந்தையை இடம் மாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை! - மஞ்சம்பட்டி காய்கறிச் சந்தை

திருச்சி: மணப்பாறையில் இருந்து 2 கி.மீ., தொலைவில் மஞ்சம்பட்டி புனித அந்தோணியர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறிச் சந்தையை இடம் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி செய்திகள்  மணப்பாறை காய்கறிச் சந்தை  people demanting to change the temporary market
மஞ்சம்பட்டி காய்கறி சந்தையை இடம் மாற்றித் தர மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை!

By

Published : Mar 31, 2020, 9:10 PM IST

Updated : Mar 31, 2020, 11:22 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறிச் சந்தையில் பொதுமக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்க போதிய இடவசதியில்லாததால் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் காய்கறிச் சந்தையானது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மஞ்சம்பட்டி புனித அந்தோணியர் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்த புதிய காய்கறிச் சந்தையானது மணப்பாறையில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால், இந்த காய்கறிச் சந்தையை மணப்பாறை பேருந்து நிலையம் அல்லது மதுரை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட ஏதேனும் ஒரு பகுதிக்கு மாற்றித் தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மஞ்சம்பட்டி தற்காலிக காய்கறி சந்தை

மேலும், மதுரை சாலை, கோவில்பட்டி சாலை மற்றும் திருச்சி சாலை பகுதியில் இருந்து இப்பகுதிக்கு காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகளும், காய்கறி வாங்க வரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வதாக கருத்து தெரிவிக்கின்றனர்.

தற்காலிக காய்கறிச் சந்தையை இடம் மாற்றம் செய்யக்கோரும் பொதுமக்கள்

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தென்காசியில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய விஜய் ரசிகர்கள்

Last Updated : Mar 31, 2020, 11:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details