புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் கோவிட் மையத்திற்கு ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியை சுற்றுச்சூழல், இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். பின்னர் நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது, "கரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. கோவிட் தடுப்பு பணிகளில் முன்னின்று அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் நலனில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
அவர்களுக்கு தேவையான கோவிட் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பபடுவதை உறுதி செய்யும் வகையில், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆலங்குடி பேரூராட்சியில் பணிபுரியும் 70 தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன் கரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன் மேலும் வடகாடு, நெடுவாசல் கிழக்கு ஆகிய பகுதிகளில் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் இடைதரகர்கள் இன்றி நேரடியாக தாங்கள் விளைவித்த நெல்லை உரிய விலைக்கு விற்று பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.