திருச்சி:சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்குப் புத்தாடை, சீருடைகள் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்குப் புத்தாடை! - பணியாளர்கள் அர்ச்சகர்களுக்குப் புத்தாடை
சமயபுரம் மாரியம்மன் கோயில் அர்ச்சகர்களுக்குப் புத்தாடைகளும், கோயில் பணியாளர்களுக்குச் சீருடைகளும் என 70 பேருக்கு அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.
இதன்படி, தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள், பணியாளர்களுக்குச் சீருடைகளைநகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சட்டப்பேரவை உறுப்பினர் கதிரவன் ஆகியோர் சமயபுரம் மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில்வழங்கினர்.
மொத்தம் 70 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் சிவராசு கலந்துகொண்டார். விழாவில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை