திமுக சட்டத்துறையின் மேற்கு மற்றும் மத்திய மண்டல வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, நிர்வாகிகளிடையே உரையாற்றினார். அப்போது, ” வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் 2,500 வழக்கறிஞர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நமக்கு நம்பிக்கை இல்லை. அதனால் தேர்தலின் போது பதிவாகும் ஒவ்வொரு வாக்கையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அனைத்து வாக்குகளையும் கணக்கிட வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானால் மாற்று இயந்திரம் பயன்படுத்தும் போது பதிவான வாக்குகளை துல்லியமாக கணக்கிட வேண்டும். கடந்த முறை தேர்தலின்போது உபரியாக 500 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வந்து இருப்பு வைத்தனர். அதில் என்ன இருந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.