புதுக்கோட்டை மாவட்டம் அடுத்த கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
பொன்னமராவதி அருகே சமூக இடைவெளியுடன் பாரம்பரிய பங்குனி பொங்கல் - mariyamman temple
பொன்னமராவதி கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் சமூக இடைவெளியுடன் பாரம்பரிய பங்குனி பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பங்குனி பொங்கல்
கரோனா பரவல் காரணமாக சென்ற ஆண்டு விழா தடைபட்டது.
இந்நிலையில், பொன்னமரவாதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொன்னையூர் கோயிலுக்கு மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியுடன் நடந்தே சென்ற பக்தர்கள், அங்கு முத்துமாரியம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.