கரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை திறக்க அனுமதியில்லை என தெரிவித்திக்கப்பட்டிருந்தது.
கரோனா கட்டுப்பாடுகளை மீறிய கடைக்கு அபராதம் விதிப்பு! - corona news
திருச்சியில் கரோனா கட்டுப்பாடுகளை மீறி திறந்து வைத்திருந்த கடைக்கு நகராட்சி நிர்வாகம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்த நிலையில், இன்று (ஏப்.29) திருச்சி சாலையில் உள்ள பல்நோக்கு அங்காடி தடை உத்தரவை மீறி திறக்கப்பட்டிருப்பதாக, நகராட்சி ஆணையருக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நகராட்சி ஆணையர் கடையைப் பார்வையிட்டு கடைக்குள் இருந்த ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் உடனடியாக அப்புறப்படுத்தி, கடை உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதுபோன்று மீண்டும் கரோனா விதிமுறைகளை மீறினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.