வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை இன்று மாலை ஜனாதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’எந்தெந்த தொகுதிகளில் 2000 ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதெல்லாம் ஊடகங்களில் வெளியிடப்படுவது கிடையாது. இது தான் அவர்களது ஜனநாயகம். துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் தேனியில் போட்டியிடுகிறார். அங்கு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி ஆதாரத்துடன் காணொளி ஒளிபரப்பானது.
அதிமுகவிற்கு தோல்வி பயம்: தேர்தல் ரத்து குறித்து ஸ்டாலின்! - trichy dmk stalin pressmeet
திருச்சி: அதிமுகவினருக்கு ஏற்பட்ட தோல்வி பயம் காரணமாக வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
![அதிமுகவிற்கு தோல்வி பயம்: தேர்தல் ரத்து குறித்து ஸ்டாலின்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3023443-thumbnail-3x2-sta.jpg)
இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சர் வேலுமணி பினாமி வீட்டில் சோதனை நடந்தது. அந்த சோதனையை குறித்த செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக மீது களங்கம் சுமத்த வேண்டும் என்பதற்காக, மோடி தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துகிறார். தற்போது கூட தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது.
தமிழிசை சௌந்தரராஜன் வீட்டில் கோடி கோடியாகப் பணம் உள்ளது. ஏன் அங்கே சோதனை நடத்தவில்லை. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை, நீதிமன்றம், தேர்தல் ஆணையம் எல்லாவற்றையும் மோடி வைத்துக் கொண்டு தேர்தலைக் குலைக்கத் திட்டமிட்டுள்ளார். அதிமுகவினருக்குத் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது., என்றார்.
TAGGED:
trichy dmk stalin pressmeet