திருச்சி:தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு இன்று (மே 07) திருச்சி மாநகராட்சி சார்பில் குழுமணி சாலையில் உள்ள கோவிந்தசாமி கவுண்டர் நகர் பூங்காவில் 17,632 சதுரஅடி பரப்பளவில் 'மியாவாக்கி அடர்வனக்காடு' உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
திருச்சியில் 'மியாவாக்கி காடு' உருவாக்கும் முயற்சியில் மேயர் - :திமுக ஓராண்டு நிறைவு
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஓராண்டு நிறைவு செய்ததை முன்னிட்டு திருச்சி மாநகராட்சியில் 'மியாவாக்கி காடு' உருவாக்கும் பணி தொடங்கப்பட்டது
திருச்சி மேயர்!