தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்சியில் கரோனா நிவாரண பொருள் வழங்கிய அமைச்சர்கள் - கரோனா நிவாரண பொருட்கள்

திருச்சி: 200 பேருக்கு கரோனா நிவாரண பொருள்களை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர்.

திருச்சியில் கரோனா நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர்கள்
திருச்சியில் கரோனா நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர்கள்

By

Published : Aug 27, 2020, 4:44 PM IST

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதில் படிப்படியாக தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. எனினும் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி பல தொழிலாளர்கள் வருவாயின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக அரசு சார்பிலும் அரசியல் கட்சிகள் சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வார்டு வாரியாக மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று (ஆகஸ்ட் 27) திருச்சி காஜாமலை காலனியில் உள்ள சமுதாய கூடத்தில் 200 பேருக்கு அரிசி, மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details