தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காளை பிடிவீரருக்கு மோதிரம் வழங்கிய அமைச்சர் - Minister presented the ring to Murthy

திருச்சி பெரிய சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்றில் அசத்தலாக ஆடிய பூலாங்குடியைச் சேர்ந்த மூர்த்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரை பவுன் மோதிரம் அணிவித்து சிறப்பித்தார்.

மூர்த்திக்கு மோதிரம் வழங்கிய அமைச்சர்
மூர்த்திக்கு மோதிரம் வழங்கிய அமைச்சர்

By

Published : Jan 15, 2022, 2:43 PM IST

திருச்சி பெரிய சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்றில் அசத்தலாக ஆடிய பூலாங்குடியைச் சேர்ந்த மூர்த்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரை பவுன் மோதிரம் அணிவித்து சிறப்பித்தார்.

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், உலகப் புகழ் வாய்ந்த பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று நடைபெறும் நிலையில், 700 காளைகளுடன் 300 மாடுபிடி வீரர்கள் களம் காண்கின்றனர். முன்னதாக, மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஜன.14ஆம் தேதி தொடங்கியது.

இந்தக் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க:Thiruvalluvar Thirunal: திருவள்ளுவர் திருநாள் - திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details