திருச்சிபுத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் இன்று (ஏப்.24) பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'உலக புத்தகப் பெருவிழா' நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், "இல்லம் தேடி கல்வி " திட்டத்தின் கீழ் ஆயிரம் மையங்களுக்கு நூலகம் அமைப்பதற்காக ரூபாய் 10 இலட்சம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினார்கள்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக உள்ளது. அதற்கு இதில் பணியாற்றும் தன்னார்வலர்கள் மிக முக்கியக் காரணம். அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம். பள்ளி மேலாண்மை குழுவிற்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட மையங்கள் செயல்படுகிறது. அனைத்து இடங்களிலும் சிறிய அளவிலான நூலகங்களை அமைக்கப்படும்" என்றார்.