கரோனா தொற்று தீவிரமடைந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் வாங்கிச் செல்ல அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் கரோனா தொற்று குறித்து காவல்துறை, சுகாதாரத் துறை, நகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக இன்று மணப்பாறையில் தீயணைப்புத் துறை வாகனம் மூலம் மணப்பாறை பேருந்து நிலையம், புதுத்தெரு உள்ளிட்ட பிரதான சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.