தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.2.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு - lorry parked on the roadside theft of liquor bottles

திருச்சி, சமயபுரம் சுங்க சாவடி அருகே லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் டீ குடிக்க சென்றபோது லாரியில் இருந்த ரூ. 2. 25 லட்சம் மதிப்புள்ள 36 பெட்டி மதுபாட்டில்களை திருடியது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபாட்டில்கள் திருட்டு
மதுபாட்டில்கள் திருட்டு

By

Published : Jan 24, 2022, 2:19 PM IST

சென்னை, மதுராந்தகம் பகுதியில் என் ஜே எஸ் என் ஜே என்ற மதுபான தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து 975 மதுபான பெட்டிகளை ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு சிவகங்கைக்கு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக லாரியை அதன் ஓட்டுநர் ஓட்டி வந்தார்.

அப்போது, திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். டீ குடித்துவிட்டு அந்த லாரியை பார்த்த போது லாரியில் வைத்திருந்த ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள 36 மதுபான பெட்டிகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து லாரி ஓட்டுனர் செல்வம் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சமயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம்; ஆளுநர் தமிழிசை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details