தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது... இணை அமைச்சர் முரளிதரன்... - Katchatheevu Island update

கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.

இணை அமைச்சர் முரளிதரன்
இணை அமைச்சர் முரளிதரன்

By

Published : Aug 21, 2022, 12:46 PM IST

திருச்சி மாவட்டம் அதவத்தூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் நிறுவன தினம் மற்றும் வாழை வயல் தின விழாவில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கை உரிய நேரத்தில் எடுக்கப்படும்.

மத்திய வெளியுறவுத்துறைத் துறை இணை அமைச்சர் முரளிதரன்

சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை எனப் பெரும்பாலான தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தெரிவிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் திமுக மட்டுமே அவ்வாறு சொல்லி வருகிறது. எந்த கட்சியாக இருந்தாலும் அவரது வரலாற்றை படித்தால் மட்டுமே தெரிந்து கொள்ளலாம். திமுகவின் ஊழல்கள் மற்றும் குடும்ப ஆட்சியை தொடர்ந்து பாஜக எதிர்த்தும், சுட்டிகாட்டியும் வருகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு மக்களின் ஆதரவு பாஜகவிற்கு அதிகரித்து வருகிறது. தேசிய பாதுகாப்பிற்காக சீன உளவு கப்பலை தீவிரமாக மத்திய அரசு கண்காணித்து வருகிறது" என்றார்.

இதையும் படிங்க:பாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details