திருச்சி: திருச்சி மாவட்டத்தில் புத்தூரில் புகழ்பெற்ற குழுமாயி அம்மன் கோயில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் குட்டிகுடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல, இத்திருவிழாவின்போது, ஆயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டு அவற்றின் ரத்தத்தை மருளாடி குடித்து அதன் பின்னர், மருளாடி பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது மிகச் சிறப்பு.
குட்டிகுடி திருவிழா
இந்த கடந்த பிப்.26ஆம்தேதி குட்டிகுடி திருவிழாவானது, காப்புக் கட்டப்பட்டு, மார்ச் 6ஆம் தேதி காளியாட்டத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிகுடி நிகழ்ச்சி மார்ச் 10ஆம் தேதியான இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோயிலுக்கு பக்தர்களால் வேண்டுதலுக்காகவும், கொடையாகவும் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆடுகள் மந்தைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு அம்மன் அருள்பெற்ற மருளாடி சிவக்குமார் ஆக்ரோஷமாக ஆடி, ஆட்டின் கழுத்துப் பகுதிகளை கடித்து ரத்தத்தைக் குடித்த பின்னர், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.