திருச்சி:அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம் கொலை தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வு குழுவின்(Sit) காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசுகையில், 'குற்றவாளிகளை பிடிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன், புதிய கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம்.
5 தனிப்படை
இதற்காக 45 பேர் கொண்ட 5 தனிப்படைகளை அமைத்துள்ளோம். இதில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தேவைக்கு ஏற்ப இதில் காவல் அலுவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
சிறையில் விசாரணை
கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, சேலம், வேலூர் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் உள்ள சந்தேகத்திற்கு இடமான கைதிகளிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.