தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தம்பித்துரைக்கு இதுவே கடைசி தேர்தல் - செந்தில் பாலாஜி! - திருச்சி

கரூர்: அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் தம்பித்துரைக்கு இதுவே கடைசி தேர்தல் என்று திமுக கட்சி நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

trichy

By

Published : Mar 26, 2019, 9:02 PM IST


திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கரூர் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.ஜோதி மணியை அறிமுகம் விழாவும், கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமமுகவில் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பல கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய செந்தில் பாலாஜி, கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியை கண்டு தம்பிதுரை பயப்படுகிறார் என்று கூறினார்.

மேலும் கரூரில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தம்பிதுரை தான் வேளாண் கல்லூரி, மருத்துவ கல்லூரி என உயர்ந்து கொண்டிருக்கிறார். கரூர் தொகுதிக்கு எந்த வித வளர்ச்சியும் இல்லை என்று செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details