சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நடிகர் விஜயின் ரசிகர்கள் அவ்வப்போது தங்களது போஸ்டர்களால் பரபப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவரிசையில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர், விஜய்க்கு நாளைய முதல்வரே! இளம் தலைவரே! என போஸ்டர் ஒட்டியுள்ளனர். அக்.21ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் தேவைப்பட்டால், அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்தார்.
நாளைய முதல்வரே! இளம் தலைவரே! விஜய் போஸ்டர்! - அரசியலில் விஜய்
திருச்சி: நடிகர் விஜயின் ரசிகர்கள் அவருக்கு, நாளைய முதல்வரே! இளம் தலைவரே! எனப் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
விஜய் போஸ்டரால் மீண்டும் சர்ச்சை
இதைத்தொடர்ந்து அவரது ரசிகர்கள் தற்போது இதுபோன்ற போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இதேபோல மதுரை, கள்ளிக்குறிச்சியில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மீண்டும் போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்: கிழித்த காவல் துறையினர்