திருச்சி: மணப்பாறை அருகே டிசம்பர் 14ஆம் தேதி மாலை ரயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து அங்கு சென்று பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இறந்து கிடந்தவர் வடுகபட்டி புதூரைச் சேர்ந்த தங்கையா (80) என அடையாளம் கண்டனர்.
இதையடுத்து, ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவலர்கள் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.