தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நடக்கோரி வழக்கு:  ஆட்சியர், திட்ட இயக்குனர் பதிலளிக்க உத்தரவு!

மதுரை: தேசிய நெடுஞ்சாலை எண் 45இல் மணப்பாறை முதல் வையம்பட்டி வரை மரக்கன்றுகளை நடக்கோரிய வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர், பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை
மதுரை

By

Published : Feb 8, 2021, 3:30 PM IST

திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த அல்போன்ஸ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சியில் இருந்து திண்டுக்கல் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 45ஐ நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்காக, சாலையின் இருபுறங்களிலும் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. ஏழு ஆண்டுகள் ஆகியும் ஒரு மரக்கன்று கூட நடப்படவிலை. தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நடுவதால், காற்று மாசுபடுவது குறையும். திருச்சியில் மணப்பாறை முதல் வையம்பட்டி வரை சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடக்கோரி, அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தேசிய நெடுஞ்சாலை எண் 45இல் மணப்பாறை முதல் வையம்பட்டி வரை சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகளை நட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, வழக்கு குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details