திருச்சி: லால்குடி கீழவீதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலின் 58ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று (ஜன. 31) நடைபெற்றது.
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வில் 600க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்களும் பங்கேற்றனர். சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பட்டுப் புடைவை, வேஷ்டி, துண்டு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.