தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒரு குடும்ப ஆட்சி ஜனநாயகம் ஆகாது - திமுக ஆதரவு எம்பி - பாரிவேந்தர் பேட்டி

'ஒரு கட்சி, ஒரு குடும்பம் மட்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது ஜனநாயகம் ஆகாது. எல்லோருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கச் செய்வதுதான் ஜனநாயகம்' என திமுக ஆதரவில் எம்பியான பாரிவேந்தர் கூறியுள்ளார்.

trichy ijk parivendhar pressmeet, jai bhim movie, ijk chief pachaimuthu, parivendhar press meet, ஜெய்பீம், பச்சைமுத்து, ஐஜேகே தலைவர் பச்சைமுத்து, பாரிவேந்தர் பேட்டி, பச்சைமுத்து பேட்டி
ஐஜேகே தலைவர் பச்சைமுத்து

By

Published : Nov 18, 2021, 11:16 AM IST

திருச்சி: பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், ஐஜேகே நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் தனது பெரம்பலூர் தொகுதிக்குள்பட்ட கோயில்கள், தேவாலய பணிகளுக்காக, தனது சொந்த நிதியிலிருந்து 66 லட்சம் ரூபாயை வழங்கினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "புதிய கோயில்கள் கட்டவும், பழைய கோயில்களைப் புனரமைக்கவும், பழுதான நிலையில் உள்ள தேர்ச் சக்கரங்களைச் சீர்செய்யவும் பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர்.

ஒரு குடும்ப ஆட்சி ஜனநாயகம் ஆகாது

இதனை ஏற்றுக்கொண்டு, அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிவருகிறேன். திராவிட இயக்கத்தினர்கள்கூட இறைவனை ஒத்துக்கொள்ளும் நிலைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ள பாதிப்பின்போதும் நிவாரண பொட்டலங்களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவருகிறோம்.

தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்களும், ஆட்சி செய்பவர்களும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தைகள். ஒழுக்கம் உள்ளவர்கள், தூய்மையானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அதற்குத் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர வேண்டும்.

ஒரு கட்சி, ஒரு குடும்பம் மட்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது ஜனநாயகம் ஆகாது. எல்லோருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கச் செய்வதுதான் ஜனநாயகம். திமுகவுடன் எங்களுக்கு நட்பும் இல்லை; உறவும் இல்லை; அவர்களை எதிர்க்கவும் இல்லை.

ஜெய் பீம் விவகாரம் - பணமே முக்கிய நோக்கம்!

அரசியலில் சிலர் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்ள ஜெய்பீம் படப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளனர். தொழில் உரிமை தனிமனித உரிமையில் யாரும் தலையிடக் கூடாது.

அந்தப் படத்தில் வந்த பொம்மையை வைத்து பிரச்சினை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்திருப்பவர்களின் முக்கிய நோக்கம் பணமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாநில குழந்தைகள் பாதுகாப்புச் சங்கத்திற்கு ரூ. 1.29 கோடி - தமிழிசை ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details