தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்சியில் அனுமனுக்கு பிரம்மாண்ட வடைமாலை - hanuman jeyanthi at tamilnadu

திருச்சியில் பிரசித்திபெற்ற கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் செய்யப்பட்ட வடைமாலை சாற்றப்பட்டது.

திருச்சியில் அனுமனுக்கு பிரம்மாண்ட வடைமாலை
அனுமன் ஜெயந்தி

By

Published : Jan 2, 2022, 1:48 PM IST

திருச்சி: அனுமன் ஜெயந்தி விழா நாடெங்கிலும் உள்ள அனுமன் ஆலயங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருச்சியில் பிரசித்தி பெற்ற கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்று தங்கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன.

திருச்சியில் அனுமனுக்கு பிரம்மாண்ட வடைமாலை

மேலும், ஒரு லட்சத்து எட்டு வடைகளாலான வடை மாலையும், பத்தாயிரத்து எட்டு ஜாங்கிரிகள் கொண்ட ஜாங்கிரி மாலையும் சாற்றப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: கரோனா மூன்றாவது அலை தொடங்கியது- அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details