தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுபானக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! - Trichy district Collector

திருச்சி: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு ஏப்ரல். 25, மே. 1, மே. 2 ஆகிய மூன்று நாள்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மூன்று நாள்களுக்கு மதுபானக் கடைகளுக்கு அரசு விடுமுறை
அந்த மூன்று நாள்களுக்கு மதுபானக் கடைகளுக்கு அரசு விடுமுறை

By

Published : Apr 20, 2021, 4:43 PM IST

ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் தினம், தொழிலாளர் தினம் போன்ற நாள்களில் மதுபானக் கடைகள், பார்களுக்கு விடுமுறை விடப்படும்.

இந்த வகையில் ஏப்ரல். 25ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதேபோல் மே. 1ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து மே. 2ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அரசு மதுபானக் கடைகள், பார்கள் மூடப்பட்டிருக்கும் தேதிகள்

  • ஏப்ரல். 25,
  • மே. 1,
  • மே. 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருச்சியிலுள்ள அரசு மதுபானக் கடைகள், பார்கள் மேற்கண்ட மூன்று நாள்களும் மூடப்பட்டிருக்கும் என்று ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார்.

வழக்கமாக இத்தகைய விடுமுறை தினம் வரும்போது மதுப்பிரியர்கள் முன்கூட்டியே மதுபான வகைகளை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வார்கள். மேலும், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனையை அதிகரிக்கும் வகையில் கடைகளிலும் விடுமுறை தினம் குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்படும்.

ABOUT THE AUTHOR

...view details