திருச்சி: காந்தி சந்தையின் பிரதான நுழைவு வாயில் அருகே உள்ள ஒரு தேநீர்க் கடை இன்று அதிகாலை முதல் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு திடீரென எரிவாயு உருளை வெடித்தது, இதில் கடை முழுவதும் தீப்பரவி பயங்கர புகைமூட்டத்துடன் எரியத் தொடங்கியது.
சிலிண்டர் வெடித்து தீ விபத்து இந்த விபத்தில் தேநீர்க் கடையில் வடை சுடுபவர் ஒருவரும், தேநீர் குடித்துக் கொண்டிருந்த மாநகராட்சி ஊழியர் அல்போன்ஸ் என்பவரும் காயம் அடைந்தனர். இருவரும் மீட்கப்பட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவல் அறிந்த திருச்சி தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து போராடி தீயை அணைத்தனர். எனினும் அந்தத் தேநீர்க் கடைக்கு அருகில் இருந்த ஒரு சில கடைகளுக்கும் தீப்பரவி சேதத்தை ஏற்படுத்தியது. தீ விபத்து குறித்து காந்தி சந்தை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதிகாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமுள்ள காந்தி சந்தைப் பகுதி தேநீர்க் கடையில் உருளை வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மதுரை வளர்ச்சிக் குழும தற்காலிக அமைப்பு - அரசு ஆணை