திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், துவாக்குடி அருகே அரை வட்டச் சாலை அமைக்கும் பணிக்காக குளங்களை மூடப்பட்டுள்ளதுகண்டிக்கத்தக்கது என்றும், 13 ஏரிகளை மூடாமல் உயர்மட்டப் பாலம் கட்டி, சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சின்னதுரை இன்று (செப்.30) தொடங்கியுள்ளார்.
ஏரிகள் மூடப்படுவதைக் கண்டித்து போராட்டம்!
திருச்சி : ஏரிகள் மூடப்படுவதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
Farmers protest against closure of lakes
துவாக்குடி அருகே திருச்சி, தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரை வட்டச் சாலையை இணைக்கும் பாலம் பகுதியில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட சின்னதுரை, தன்னார்வலர் சம்சூதீன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.