தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிணற்றில் தத்தளித்த மாணவியைக் காப்பாற்றிய உழவன்: பொதுமக்கள் பாராட்டு - manapparai nursing student incident

மணப்பாறை அருகே கிணற்றில் தத்தளித்த மாணவியைக் காப்பாற்றிய உழவனை (விவசாயி) பொதுமக்கள், மாணவியின் உறவினர்கள் பெரிதும் பாராட்டினர்.

மாணவியை காப்பாற்றிய விவசாயி
கிணற்றில் தத்தளித்த மாணவியை காப்பாற்றிய விவசாயி

By

Published : Jan 20, 2022, 6:02 AM IST

Updated : Jan 20, 2022, 7:10 AM IST

திருச்சி: மணப்பாறை அடுத்த பொய்கைப்பட்டி அருகேயுள்ள தனி நபருக்குச் சொந்தமான சுமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் நேற்று (ஜனவரி 19) காலை இளம்பெண் ஒருவர் நீரில் தத்தளித்துள்ளார்.

அந்தக் கிணற்றுப் பகுதி அருகே காலி மதுபாட்டில்களைச் சேகரித்துக் கொண்டிருந்த ராசு என்பவர், பெண் ஒருவர் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளார்.

அப்போது அவ்வழியே உழவுப் பணிக்குச் சென்றுகொண்டிருந்த பெருமாம்பட்டியைச் சேர்ந்த உழவர் வடிவேல் என்பவர் கிணற்றுக்குள் குதித்து நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணைக் காப்பாற்றியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இளம்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

கிணற்றின் அருகிலிருந்த செல்போனை எடுத்து ஆய்வுசெய்ததில் அவர் கலிங்கப்பட்டியைச் சேர்ந்த செவிலி மாணவி எனத் தெரியவந்தது. தகவலறிந்த மணப்பாறை காவல் துறையினர் சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நீரில் தத்தளித்த இளம்பெண்ணைக் காப்பாற்றிய உழவரை, பெண்ணின் பெற்றோர், அவரது உறவினர்கள் உள்ளிட்ட அப்பகுதியினர் வெகுவாகப் பாராட்டினர்.

இதையும் படிங்க: Stock Market Highlights: பூரிப்பை தராத புதன்

Last Updated : Jan 20, 2022, 7:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details