தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருட்டுபோன முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் கார்: போலீஸ் விசாரணை! - கார் திருட்டு

திருச்சியில் முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரின் காரை திருடிச் சென்றவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

முன்னாள் அதிமுக எம்எல்ஏ கார் திருட்டு
முன்னாள் அதிமுக எம்எல்ஏ கார் திருட்டு

By

Published : Sep 3, 2021, 8:17 AM IST

திருச்சி:மணப்பாறை இந்திரா நகரைச் சேர்ந்தவர் முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சின்னசாமி. இவர், தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்னோவா காரைக் காணவில்லை என மணப்பாறை காவல் நிலையத்தில் முன்னதாக புகார் அளித்தார்.

அப்புகாரில், நேற்றிரவு (செப்.01) காரை தன் வீட்டின் முன் நிறுத்திவிட்டு சுமார் 10.30 மணியளவில் தூங்கச் சென்றதாகவும், விடியற்காலை ஆறு மணியளவில் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் காணாமல் போய் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

போலீஸ் விசாரணை

இதையடுத்து மணப்பாறை காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, மோப்ப நாய், தடயவியல் வல்லுநர்களை வரவழைத்து சோதனையிட்டனர்.

கார் திருடப்பட்ட வீடு

அதில் தடயங்கள் ஏதும் கிடைக்காத நிலையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமாராக்களை ஆய்வு செய்து திருடர்களைப் பிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஆதார் விவரங்களைக் கொண்டு பி.எப் பணம் திருட்டு: இ-சேவை மைய உரிமையாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details