திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே காந்திநகர் ஐயப்பன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள வீடுகளுக்கு கடந்த சில நாட்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
குடிநீர் வேண்டி காலி குடங்களுடன் சாலை மறியல் - WATER ISSUE
திருச்சி: வையம்பட்டி கிராம பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
WATER ISSUE
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வையம்பட்டி காவல் துறையினர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து விரைவில் முறையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.