தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யானை தந்தம் கடத்திய இருவர் கைது - திருச்சியில் யானை தந்தம் கடத்திய இருவர் கைது

திருச்சியில் யானை தந்தம் கடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 5 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யானை தந்தம் கடத்திய இருவர் கைது
யானை தந்தம் கடத்திய இருவர் கைது

By

Published : Jan 24, 2022, 10:04 AM IST

Updated : Jan 24, 2022, 10:42 AM IST

திருச்சி:திருச்சி மாவட்டம் தேவராயநேரி நரிக்குறவர் காலனியில் யானைத் தந்தங்கள் மறைத்து வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அப்பகுதியில் அவர்கள் சோதனை நடத்தினர். அங்கு அருண்பாண்டி மற்றும் செளந்தரராஜன் ஆகிய இருவரும் சிறிய அளவிலான 5 யானைத் தந்தங்களை மறைத்து வைத்திருந்தனர்.

இந்த தந்தங்கள் 3 செ.மீ நீளமும், 1.5 செ.மீ அகலமும் கொண்டது. தந்தத்தைப் பறிமுதல் செய்த வனத்துறையினர் இருவரையும் கைது செய்தனர். யானைத் தந்தம் எப்படி, யார் மூலம் கிடைத்தது என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானை தந்தத்தை செதுக்கி நரி பல், சிங்கம் நகம் என விற்று வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் உடல் சென்னை வந்தது

Last Updated : Jan 24, 2022, 10:42 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details